17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய தனியார் அறக்கட்டளைகள்…

அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய தனியார் அறக்கட்டளைகள்…

எழுதியவர்: ஆசிரியர் February 22, 2019, 10:45 pm

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு பிகேஎம் அறக்கட்டளை, குருஜி அறக்கட்டளை மற்றும் குயின் மீரா சர்வதேச பள்ளி இணைந்து ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை வழங்கி திறந்து வைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பாப்பாபட்டி அரசு கள்ளர் தொடக்க பள்ளி. இந்த தொடக்க பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த தொடக்க பள்ளியில் பெரும்பாலும் கிராம புற மாணவர்கள் தான் படிக்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி உசிலம்பட்டி பிகேஎம் அறக்கட்டளை, குருஜி அறக்கட்டளை மற்றும் மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளி நிர்வாகத்தினர் இனைந்து ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்களை வாங்கி தந்தனர். பின்பு அந்த வகுப்பறையை திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் கள்ளர் சீரமைப்புதுறை இனைஇயக்குநர் குமார் மற்றும் அறக்கட்டளையின் தலைவர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!