17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் 22 கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகள் திறப்பு விழா..

மதுரையில் 22 கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகள் திறப்பு விழா..

எழுதியவர்: ஆசிரியர் February 22, 2019, 10:30 pm

இன்று (22.02.19) மாலை 6 மணியளவில் மதுரை மாநகர் E1 புதூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 22 கேமிராக்களின் பதிவுகளை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS.,  திறந்து வைத்தார்.

புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவும், குற்றவாளிகள் மற்றும் அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காகவும், குற்றச்சம்பவத்தில் ஈடுபடுபவர்களை விரைவில் அடையாளம் காண்பதற்காகவும் கண்காணிப்பு கேமிராக்கள் புதூர் மூன்றுமாவடி சந்திப்பு முதல் புதூர் பேருந்து நிலையம் வரை 22 கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், அவற்றின் பதிவுகளை தொடர்ந்து கண்காணிக்க காவல் ஆளினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பும் மற்றும் முக்கிய தகவல்களை உடனுக்குடன் தருவதாகவும் தொடர்ந்து காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி குற்றமில்லா மாநகராக மதுரையை மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

செய்திகள்.வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!