நெல்லை மாவட்டம் ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கின் தன்மையை அறிந்து கொள்ள வழக்கறிஞர்கள் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடுதிரை வசதியை 21.02.19 அன்று நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்.
ஆலங்குளம் வருகை தந்த மாவட்ட நீதிபதிகள் ராஜசேகர் ராஜமாணிக்கம், ஹேமானந்த் குமார் ஆகியோருக்கு ஆலங்குளம் வழக்கறிஞா்கள் சங்கம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
இவ்விழாவில் ஆலங்குளம் நீதிபதி பிச்சைராஜன் முன்னிலை வகித்தார்.மாவட்ட சார்பு நீதிபதி ஹேமானந்த் குமார் சட்டபணிக்குழுவின் பணிகள் குறித்து பேசினார்.
நல்லூர் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழாவில் ஆலங்குளம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வைத்தியலிங்கம், செயலாளார் சாந்தகுமார், பொருளாளர் மயில் வாகணன், வக்கீல் பால்ராஜ் மற்றும் வழங்கறிஞர்கள் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.