இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளி முதல்வர் திரு.எஸ்.நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக திருப்பூர் திருமதி.சைபி மேத்யூ அவர்கள் தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டு 10,000 கிலோ மீட்டர் 33 மாவட்டங்களில் இயற்கையை பாதுகாக்க பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு இராமநாதபுரம் வந்த பொழுது முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையே இயற்கையை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், பிளாஸ்டிக் கழிவுகளை கண்டால் அதற்குரிய குப்பைத் தொட்டியில் போடுவது, இதனால் மண்வளம் பாதுகாப்பதுடன் மழைநீர் பூமிக்குள் சென்று மண்வளம் பாதுகாக்கப்பட்டு விவசாயத்தில் அதிக மகசூலுடன் கூடிய் இயற்கையான தானியங்கள் நமக்கு கிடைக்கப்பெறுகிறோம் என தெரிவித்தார்.
மரம் வளர்த்தால் காற்று மாசுபடுதல் குறையும். எனவே மாசுஅற்ற காற்றை சுவாசிப்பதால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உறுதுணையாக அமையும் மேலும் பறவை இனங்கள் மற்றும் கால்நடை இனங்கள் பாதுகாக்கப்படுகிறது. எனவே மாணவர்கள் ஆகிய நீங்கள் மரம் வளர்க்க உறுதுணையாக இருந்து இயற்கை வளத்தை பாதுகாக்க உதவ வேண்டும் எனவும் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் கீழக்கரை நிஸா பவுண்டேஷன் நிர்வாகி சித்திக் உடனிருந்தார்.







You must be logged in to post a comment.