மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அதிகமாக சுற்றிவட்டாரத்தில் உள்ள கிராம மக்களே அதிகமாக வருகை தருவதுண்டு. இதை சில இடைதரகர்கள் சாதகமாக்கி பணம் பறிக்கும் வழக்கம் இருந்து வந்தது. இதையெல்லாம் முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஆன்லைன் வசதியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பாஸ்போர்ட் சேவைக்கான அனைத்து பரிவர்த்தனைகளும் இணையதளம் மூலமாக வங்கியில் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டது.
ஆனால் மதுரை மாவட்டம் மதுரையில் உள்ள கோச்சடை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய கவர் செலவு என ரூபாய் 400 பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்த வண்ணம் உள்ளனர். அந்த மாதிரியான தொகை செலுத்தவேண்டிய அவசியமே இல்லாத பொழுது 10ரூபாய் மதிப்பு கூட இல்லாத கவரை 400 ரூபாய்க்கு கட்டாயப்படுத்தி எதற்கு வாங்க வைக்கிறார்கள் என்பதை புரியாத புதிராக உள்ளது.
ஆக இவ்வாறு வாங்கும் தொகை யாருக்காக … எதற்காக… எங்கே செல்கிறது என்பது யாரும் அறியாத புதிர். எல்லாவற்றிற்கும் மேலாக கவரை கண்ணில் கூட காண்பிப்பது கிடையாது. ஆகையால் வெளியூரில் இருந்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வரும் அனைவரும் புலம்பியபடியே செல்கிறார்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்களா?? அல்லது தவறு எனும் பட்சத்தில் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா??







You must be logged in to post a comment.