ஆளில்லாத வகையில் நாட்டில் பல நூலகங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் 68 வயதான மகேந்திரகுமார். மாணவர்களுக்கான ஆர்எப்எல் இணையதளத்தையும் மகேந்திரன் நடத்தி வருகின்றார். எங்கு இப்படி ஒரு நூலகம் திறக்க விரும்பும் ஒருவர், அவரை தொடர்பு கொண்டு பேசலாம் அல்லது அதற்கான வழிமுறைகளை அந்த இணைய தளத்தில் காணலாம்.
மேலும் தேவைப்படும் புத்தகங்களை மாணவர்கள் அந்த தளத்தில் கோரிக்கையாக வைக்கலாம். நகரவாரியாக என்ன என்ன புத்தகங்கள் உள்ளன என்பதையும் அந்த தளத்தில் காணலாம். புத்தகம் கொடுக்க விரும்புவோரும் தங்களிடம் உள்ள புத்தக பட்டியலை தளத்தில் வெளியிட்டு தேவைப்படும் மாணவர்களுக்கு கொடுக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் புத்தகம் கிடைக்க வேண்டும் என்று இந்த திட்டம் செயல்படுகிறது. “20 புத்தகங்களோடு துவங்கி, தற்போது அவரிடம் 10000 மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இவைகள் அவரது விரும்பிகள் மற்றும் நண்பர்கள் கொடுத்ததாகும்.”
பல்வேறு தலைப்புகளில் இந்த நூலகத்தில் புத்தகங்கள் உள்ளன. தத்துவம், பொது அறிவு, அறிவியல், மதம், கதைகள் மற்றும் சுய முன்னேற்றம் என வேண்டிய அனைத்து தலைப்புகளும் உள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழ் இருமொழிகளிலும் உள்ளன.
தற்போது தமிழ்நாட்டில் 63 இடங்களில் இந்த நூலகம் அமைந்துள்ளது. மேலும் பெங்களூர் மற்றும் போபால் நகரங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தர விரும்பும் புத்தகங்களை கொடுக்க ஆர்.எப்.எல் ட்ராப் பாயிண்ட்ஸ் சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நூலகத்தை துவங்கியதற்கான காரணம் அனைவருக்கும் புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பதே. இதன் மூலம் மக்களை மேலும் பொறுப்புடையவர்களாக மாற்ற முயலுகின்றேன்.
மக்களுக்கு கற்றுத்தர நான் இதனை செய்யவில்லை. செலவு இன்றி மக்களுக்கு புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை செய்கின்றேன்,” என்கிறார் மகேந்திர குமார்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.