தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்கள் ஒன்று. இங்கு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க தொங்கு பாலம், மெயின் அருவி, சிறுவர் பூங்கா, முதலைப்பன்ணை, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு கர்நாடகாவில் உள்ள குடகு மலை காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் 2இலட்சம் கனஅடி வரை திறந்துவிடப்பட்டது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு ஆறுமாத காலமாக மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்து 200கன அடியாக சரிந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குறைவாக காணப்பட்டனர்.
மேலும் ஒகேனக்கல்லில் வரலாறுகாணாத அளவில் தண்ணீர் வரத்து குறைந்ததால் தருமபுரி ,கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக வாரம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. தண்ணீர் பஞ்சம் அதிகரித்த நிலையில் கர்நாடக அரசு கபினி அணையிலிருந்து 3076கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆகமொத்தம் 3576கனஅடி யாக திறந்துவிடப்பட்டது . மேலும் பிலிகுண்டு நிலவரப்படி நேற்று முன்தின நிலவரப்படி மாலை 270கனஅடியாக இருந்த தண்ணீரானது படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை மத்திய நீர் நிலை அளவின் படி 1900கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த கோடை காலத்தில் தண்ணீர் திறந்துவிட்டதால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த தண்ணீரானது திறந்துவிடப்பட்டதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
என். ஸ்ரீதரன் தருமபுரி செய்தியாளர்










You must be logged in to post a comment.