கேரள அரசு சார்பாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப் பகுதியான ஆனவச்சால் என்ற இடத்தில் வாகன நிறுத்துவதற்தான இடத்தை அமைத்து வருகிறது, இதனைக் கண்டிக்கும் விதமாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸ் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் SR.தேவர் தலைமையிலும், அன்வர் பாலசிங்கம், சிவகங்கை முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும் 21.02.19 அன்று நடைபெற்றது.
உழவர் உழைப்பாளிகள் கட்சியின் நிறுவனர், தலைவர், செல்லமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கேரள அரசு வாகன நிறுத்தத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் புலிகள் காப்பகம் என பசுமைத் தீர்ப்பாயம் முடிவு செய்யப்பட்ட இடமாகும், மேலும் இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதன் மூலம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைப்பதற்கு வழி வகுக்கும் போன்ற காரணங்களை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட துணைச் செயலாளர், ரஞ்சித், துணை தலைவர் ராஜிவ், துணை செயலாளர்கள், சலேத்து மணிகண்டன், ஆகியோர்கள் ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன் நிறைவுரை நிகழ்த்தினார்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.