இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த கொலம்பஸ் என்பவரது விசைப்படகில் தென் கடல் பகுதியில் நேற்று (20/02/2019) முன் தினம் மாலை மீன்பிடிக்கச் சென்றனர். அன்று நள்ளிரவு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை கொலம்பஸ் படகை சுற்றி வளைத்தது. படகிலிருந்த அடைக்கலம் மகன் கொலம்பஸ் 38, பரஞ்ஜோதி மகன் அருள்சகாயம் 32, ஜெயபால் மகன் ஜெயகாந்தன் 35, நிக்கோலஸ் மகன் அடைக்கலம் 55, மூக்கன் மகன் முருகன் 40 ஆகியோரை படகுடன் சிறை பிடித்துச் சென்றது. ஐந்து பேரையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரித்து, மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் 3 படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர் 13 பேர் பையோ மெட்ரிக் கைரேகை சோதனைக்கு பின் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். .




You must be logged in to post a comment.