இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ,தெளிச்சாத்தநல்லூர் சாய் பாபா கோயிலில் 21.02.2019 இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த உணவு சாப்பிட்ட சிறுவர்கள், முதியோர், பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டடது. அவர்கள பரமக்குடி அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் குவிந்ததால் பரமக்குடி நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்பு பலர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.







You must be logged in to post a comment.