மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த அறிவுச்செல்வி என்பவர் கல்லுப்பட்டியிலிருந்து திருமங்கலத்திற்கு பேருந்தில் பயணம் செய்த போது பேருந்தில் வந்த இரு பெண்கள் அறிவுசெல்வியிடம் பேச்சு கொடுத்து அவர் வைத்திருந்த கைப்பையிலிருந்து ரூ.1 லட்சத்தை திருடிசென்று விட்டனர்.
இது குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் திருமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த பெண் ஒருவரை பிடித்து வந்து COPS EYE செயலி மூலம் பரிசோதித்த போது அவர் மேலூரை சேர்ந்த ஜீவா என்பதும் அவர் மீது சிவகங்கை மாவட்டத்தில் குற்ற வழக்கு இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பேருந்தில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




You must be logged in to post a comment.