18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்டுக் குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் நாய்….

ஆட்டுக் குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் நாய்….

எழுதியவர்: ஆசிரியர் February 22, 2019, 1:40 pm

திண்டுக்கல் அருகே 3 ஆட்டு குட்டிகளுக்கு ஒரு நாய் பாலூட்டுவது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகேயுள்ள சாமியார் பட்டியை சேர்ந்த சதுர மகாலிங்கம் என்பவர் ஆண்டாள் என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். ஆண்டாள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5 குட்டிகளை ஈன்றுள்ளது. அதனை அக்கம் பக்கத்தினர் வளர்ப்பதற்காக தூக்கி சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குட்டியை பிரிந்த ஆண்டாள், சதுர மகாலிங்கம் சந்தையிலிருந்து வாங்கி வந்த மூன்று ஆட்டு குட்டிகளுக்கு பாலூட்டி வருகிறது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஆண்டாள் நாயை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

ஆத்தூர் நிருபர் :-பி. அப்பாஸ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!