17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி முகாம் – சுகாதார இணை இயக்குனர் முன்னிலையில் நடைபெற்றது.

கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி முகாம் – சுகாதார இணை இயக்குனர் முன்னிலையில் நடைபெற்றது.

எழுதியவர்: keelai March 11, 2017, 4:28 pm

கீழக்கரையில் இன்று 11.03.17 வடக்கு தெரு முஹைதீனியா மெட்ரிகுலேஷன் பள்ளி தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் ராசிக்தீன் தலைமை வகித்தார். சுகாதார இணை இயக்குனர் காஞ்சனா முன்னிலையில் முன்னதாக விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்து தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்த நல்ல முயற்சியினை முன்னெடுக்கும் அரசு துறையினருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியின் தாளாளர் மௌலா முகைதீன், உப தலைவர் M.M.S முஹைதீன் இபுறாஹீம், கல்விக்குழு பொருளாளர் சேகு பஷீர் அஹமது, பள்ளியின் முதல்வர் N.M சேகு சஹபான் பாதுஷா மற்றும் கல்விகுழு அங்கத்தினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!