தமிழக அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 – இலட்சம் குடும்பங்களுக்கு 2000 – ரூபாய் வழங்க இருப்பதை தொடர்ந்து அரசு அலுவலகங்களில்
அலைமோதும் கூட்டம். தமிழக அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 – இலட்சம் குடும்பங்களுக்கு குடும்பத்திற்கு தலா – 2000 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளதையடுத்து.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிகளில் அரசு அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து இன்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதற்கான படிவத்தினை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு அப்பகுதி ஏழை எளிய வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்கள் பெண்கள் , ஆண்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் குவிந்தனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் பேரூராட்சி அலுவலம் ஊராட்சி அலுவலகம் என அந்தந்த பகுதி வாழ் பொது மக்கள் அதற்கான படிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்க கூட்டம் கூட்டமா செல்கின்றனர்.




You must be logged in to post a comment.