17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » உலக செய்திகள் » செய்திகள் » விளையாட்டு செய்திகள் » செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சி

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சி

எழுதியவர்: ஆசிரியர் March 11, 2017, 4:25 pm

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.03.2017 அன்று மாலை 2 மணியளவில் முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர்.ரஜபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்திய கப்பற்படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ஏ. வைத்தியநாதன் அவர்கள் கலந்து கொண்டார்.

இவ்விழாவிற்கு முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்.அலாவுதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர்.ரஜபுதீன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையினை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்.தவசிலிங்கம் அவர்கள் வாசித்தார்.

இவ்விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாணவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஒரு பகுதியாக பல்வேறு வியைளாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் .மருதாச்சலமூர்த்தி, சத்தியேந்திரன், செந்தில்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் ஆனந்த் அவர்கள் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர்.யூசுஃப், செயலர்.ஷர்மிளா மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!