17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது…

அதிமுக வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது…

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2019, 9:57 pm

மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி .மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் கிழக்கு மாவட்ட செயலாளர் சு. ரவி கே.வி.குப்பம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன் ஆகியோர் பேசினர்.

அதிமுக பொதுச் செயலாளர் மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் கே.விகுப்பம் சீனிவாசன், சோளிங்கர் சின்னதுரை மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் சம்பத் குமார் நன்றி கூறினார்.

கே.எம். வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!