17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர்..

மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர்..

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2019, 9:46 pm
 மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக திரு எஸ்.விசாகன் அவர்கள் இன்று . ( 21.02.2019 ) பதவியேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கூறியதாவது
மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் கட்டிட வரைபட அனுமதியினை துரிதமாக, வழங்குவதற்கும், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் காலதாமதமின்றி உடனுக்குடன் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்,
மேலும்  நீண்ட கால பிரச்சனையான குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்யும் வகையில் முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், பொது சுகாதாரம் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள கல்வித்தரத்தை உயர்த்துவதற்க்கு  தனிக்கவனம் செலுத்தப்படும்,
ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருட் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தும் பெறப்பட்டு திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும், மேலும் மதுரை  மாநகரை பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத சீர்மிகு நகரமாக  மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,
சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து வரிகளும் உடனடியாக வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், மதுரை அனைத்து வார்டு பகுதிகளுக்கும் அனைத்து அடிப்படை வசதிகள் மாநகராட்சியின் மூலம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும், வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுப்பதற்கான  உரிய  நடவடிக்கைள் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் , ஏற்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.

செய்தி வி.காளமேகம் மற்றும் கனகராஜ்

மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!