திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு கிராமத்தில் வசித்து வந்த கணவன் செல்வராஜ் என்பவருக்கும் இவரது மனைவி சசிகலா என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மனைவி மற்றும் மகளை அரிவாளால் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே மனைவி சசிகலா உயிரிழந்தார் மகள் பூவிதா என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்வராஜை தாடிக்கொம்பு போலீசார் தேடி வருகின்றனர்.




You must be logged in to post a comment.