கடந்த ஞாயிற்றுக்கிழமை 18/2/2019 அன்று கோவையில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்திய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பல துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு கலாம் கனவுகள் 2019 விருதானது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் WILL MEDAL OF WORLD RECORDS நிறுவனர் தலைவர் கலைவாணி, முதன்மைச் செயலர் தஹ்மிதா பானு,கீழக்கரை கிளாசிஃபைட் நிறுவனர் தலைவர் S.K.V.ஷேக் ஜெய்னுலாபுத்தீன் ,கீழக்கரையை சேர்ந்த சிறுவன் ஹஷ்வ ப்ரணவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சென்னையை சேர்ந்த சிறுவன் மஹ்மூது அக்ரம் 400 மொழிகளில் பேச எழுத மற்றும் தட்டச்சு செய்யும் தன் திறமைக்காக will medal of world recordsல் தன் சாதனையைப் பதிவு செய்தார். அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் விழா மேடையில் வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் கலைவாணி முதன்மைச்செயலர் தஹ்மிதா பானு, நிர்வாக ஆலோசகர் S.K.V. ஷேக் ஜெய்னுலாபுத்தீன், கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கத்தினுடைய தலைவர் கவிதா சந்திரன் மாநில தலைவர் செல்வராஜ் ஆகியோர் சிறுவன் அக்ரமிற்கு வழங்கினார்.










You must be logged in to post a comment.