18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பன் ரயில் தூக்கு பாலம் கடந்து சென்ற கப்பல்கள்..

பாம்பன் ரயில் தூக்கு பாலம் கடந்து சென்ற கப்பல்கள்..

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2019, 6:48 pm

பாம்பன் ரயில் தூக்குப்பாலம் திறக்கப்பட்டு தென் கடல் பகுதியில் இருந்து வட கடல் பகுதிக்ரு 5 கப்பல்கள் இன்று (21/02/2019) கடந்து சென்றது.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மன்னார் வளைகுடா (தெற்கு ) கடல் பகுதியில் இருந்து இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான மூன்று ரோந்து கப்பல்களும் கடந்து மண்டபம் இந்திய கடலோர பாதுகாப்பு படை முகாமிற்கு சென்றன. இதனையடுத்து தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற சரக்கு கப்பல் மற்றும் இழுவை கப்பல் தூக்குப்பாலத்தை கடந்து பாக் ஜலசந்தி (வடக்கு) கடல் பகுதிக்கு சென்றது. ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்ற கப்பல்களை சாலை பாலத்தில் சுற்றுலா பயணிகள் நின்று கண்டு களித்தனர். கடந்து சென்ற இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் சி-431 கால்வாய் பகுதியில் இருந்து விலகி சென்று பாறையில் மோதி சிக்கியது. சில நிமிடங்களில் நீரோட்டத்தால் இழுக்கப்பட்டு கப்பல் கால்வாயில் மீண்டும் சென்றது.

04.12. 2018 அன்று பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு தொழில்நுட்ப கோளாறு சீரமைப்பு பணி நடைபெற்றது.இந் நிலையில் பணிகள் முடிவடைந்து முதல் முறையாக பாம்பன் ரயில் தூக்கு பாலம் இன்று 21.02.19 திறக்கப்பட்டு சரக்கு கப்பல்கள் கடந்து சென்றன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!