17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி..

இராமநாதபுரத்தில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2019, 12:51 pm

திருத்தியமைக்கப்பட்ட தேசிய காச நோய் தடுப்பு திட்டம், ராமநாதபுரம் மாவட்ட காச நோய் தடுப்பு கழகம் சார்பில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இராமநாதபுரத்தில் இன்று (20.02.2019) நடந்தது. சுகாதார நலப்பணிகள்/ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் முல்லைக் கொடி தொடங்கி வைத்தார்.

மாவட்ட காச நோய் மருத்துவ துணை இயக்குநர்/ மாவட்ட காச நோய் தடுப்பு கழக கவுரவ செயலாளா டாக்டர் சாதிக் அலி தலைமையில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர். தொழுநோய் மருத்துவ துணை இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன், மாவட்ட காச நோய் மருத்துவ அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட காச நோய் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் வாஜித் அஹமது, அரசு, தனியார் காசநோய் ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் காசிநாதன், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் பார்த்திபன், பயிற்றுநர் நாகேந்திரன், காச நோய் மருத்துவ முதுநிலை மேற்பார்வையாளர் கணபதி, காச நோய் மருத்துவ மருந்தாளுநர் ஜெய்சங்கர் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!