18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜேஆர்சி (Junior Red Cross) சார்பில் ஜூனியர் கற்றல் பயிற்சி முகாம்..

ஜேஆர்சி (Junior Red Cross) சார்பில் ஜூனியர் கற்றல் பயிற்சி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் February 20, 2019, 10:31 pm

தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் இராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் ஜூனியர்களுக்கான கற்றல் பயிற்சி முகாம் முத்துப்பேட்டை ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஜேஆர்சி கன்வீனர் எம்.ரமேஷ் வரவேற்றார். துணை சேர்மன் ஏ.சண்முக ராஜேஸ்வரன், டிஎம்எஸ் கோபி , துணைத் தலைவர் கே.ஜெயக்குமார், ராமநாதபுரம் ராயல் என்ஃபீல்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் கேடி ஆர் முருகன் முரளி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ஆர்.முருகன் தொடங்கி வைத்தார்.

இராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர்கள் டி.பிரேம், கே.பாலதண்டாயுதபாணி, வழுதூர் ஓ என்ஜிசி மேலாளர் எம்.இளங்கோவன், சக்கரக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எம்.நூர் முகமது, முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி தாளாளர் என்.எஸ்.ஜேசுதாஸ், தலைமையாசிரியர் ஏ.ஞானப்பிரகாசம், திருப்புல்லாணி வட்டார தொடக்க கல்வி அலுவலர்கள் எம்.வாசுகி, ஜே.தங்க கனிமொழி, வழக்கறிஞர் எஸ்.சண்முகநாதன், உப்பூர் அமிர்தா வித்யாலயா தாளாளர் எஸ்.பாண்டியன் வாழ்த்துரை வழங்கினர். ஜேஆர்சி மாநில பயிற்றுநர் ஜி.கோவிந்தராஜ் (கடலூர், கல்வி மாவட்ட கன்வீனர்கள் பி.பிரபாகரன் (சேலம்), பூ .தமிழ்ச்செல்வன் (அறந்தாங்கி), என்.சின்ராஜ், பி.பால சுப்பிரமணிய பாரதி (திண்டிவனம் ) ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாநில பயிற்றுநர்கள் எம்.பாலமுருகன், எம்.ஜீவா, பொருளாளர் எஸ்.குழந்தைசாமி முகாமை ஒருங்கிணைக்கின்றனர். முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஜேஆர் சி கவுன்சலர் பிரான்சிஸ் பிரபாகரன் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!