18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » “அதிமுகவின் சந்தர்ப்பவாத கூட்டணி வெற்றி பெறாது” தூத்துக்குடியில் கனிமொழி பேச்சு..

“அதிமுகவின் சந்தர்ப்பவாத கூட்டணி வெற்றி பெறாது” தூத்துக்குடியில் கனிமொழி பேச்சு..

எழுதியவர்: ஆசிரியர் February 20, 2019, 9:52 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க தூத்துக்குடி வந்திருந்த கனிமொழி எம்பி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

“திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அறிவிப்பார், திமுக அமைக்கவிருக்கும் கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. அதிமுக அரசைப் பற்றி பாமக கடுமையாக விமர்சித்திருந்தது. இந்த ஆட்சி கேடு கெட்ட ஆட்சி என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதிலிருந்தே அவர்களது கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று தெரிகிறது. நிறைய கட்சிகளை இணைத்து வெற்றி பெறலாம் என கனவு காண்கிறார்கள். ஆகவே விஜயகாந்தையும் தங்கள் பக்கம் இழுக்க முயல்கிறார்கள்.ஸ்டெர்லைட் பிரச்சனையில் அதிமுக நாடகம் ஆடுகிறது. இத்தனை உயிர்கள் பலியான பிறகுதான் மக்களைப் பற்றி இந்த அரசுக்கு தெரியவந்துள்ளது. அவர்களது நாடகம் மக்களுக்கு தெரியும்” என கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!