18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே எ.ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..

உசிலம்பட்டி அருகே எ.ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் February 20, 2019, 2:04 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது எ.ராமநாதபுரம் கிராமம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் குடிநீர் இல்லாமல் பெரும் சிரமபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடிநிர் கேட்டு உசிலம்பட்டி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குடிநீர் கேட்டு மனு அளித்து வந்தனர். ஆனால் இதுவரை குடிநீர் தருவதற்கு எந்த ஏற்பாடுகளையம் அதிகாரிகள் செய்யாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உசிலம்பட்டி திருமங்கலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடையே போச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் கிடைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!