17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் சிறப்பு மருத்துவ முகாம். ..

நிலக்கோட்டையில் சிறப்பு மருத்துவ முகாம். ..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2019, 7:39 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி சார்பில் சுகாதார சிறப்பு மருத்துவ முகாம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சர்க்கரை வரவேற்று பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் வினோத் முன்னிலை வகித்தார்.

முகாமில் பொது மருத்துவம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் மருத்துவம் சித்த மருத்துவம் காது மூக்கு தொண்டை கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் செய்த ஆய்வுகள் கர்ப்பப்பை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமில் ஆய்வு செய்யப்பட்டு உரிய சிகிச்சைக்கு சிறப்பு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் டாக்டர் அர்ஜுன் பிரபு, சுகாதார ஆய்வாளர்கள் முருகன் நாகேந்திரன் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். படவிளக்கம் நிலக்கோட்டையில் நடந்த பொது மருத்துவ முகாமில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எம் உதயகுமார் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!