17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி S.P. முரளிரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார்..

மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி S.P. முரளிரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார்..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2019, 6:13 pm

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பயின்று வரும் சுமார் 300 மாணவ மாணவிகள் பொதுமக்களிடம் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காமராஜ் கல்லூரியில் இருந்து அன்னம்மாள் கல்லூரி வரை கையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி சென்றனர். இந்த பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் இசக்கிமுத்து, மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர், மற்றும் காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் தேவராஜ், பொன்னுத்தாய், நாகராஜன், பொன் ரதி, ரெமோனா, ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்

இப்பேரணிக்கு காமராஜர் கல்லூரியின் முதல்வர் முனைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!