17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அட்வான்ஸ்டு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையம் திறப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அட்வான்ஸ்டு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையம் திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2019, 1:54 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கணக்கு அப்புச்சாமி தெருவில் கார்த்திகை சாமி ஸ்கேன்ஸ் (அட்வான்ஸ்டு அல்ட்ரா சவுண்ட் 4 டி டாப்ளர்) மையம் திறப்பு விழா நடந்தது. டாக்டர் இளையராஜா கல்வி குழும ஆலோசகர் பி.விஜய லட்சுமி வரவேற்றார். ராமநாதபுரம் ராசி கலர் ஸ்கேன்ஸ் மருத்துவர் சின்னதுரை அப்துல்லா திறந்து வைத்தார்.

இராமநாதபுரம் எஸ்.பி.ஸ்கேன்ஸ் மருத்துவர் எஸ்.பி.ஆக்னெல்லா, ராமநாதபுரம் குமரன் ஸ்கேன்ஸ் மருத்துவர் டி.ராஜ்குமார், ரேடியோலஜிஸ்ட் மருத்துவர் எஸ்.வருசை முகமது முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் சாதிக் அலி, ராமநாதபுரம் ஜவஹர் மருத்துவமனை மருத்துவர் கே.ஜவஹர் பாரூக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர் இளையராஜா குழும தலைமை செயல் அதிகாரி டி. மணிகண்டராஜா நன்றி கூறினார். மண்டபம் ராஜேஸ்வரி கிளினிக் மற்றும் டாக்டர் இளையராஜா எஜுகேஷன் & ஹெல்த் சர்வீசஸ் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் கே.இளையராஜா, கார்த்திகை சாமி ஸ்கேன்ஸ் மருத்துவர் ஆர்.சஹானா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!