18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இடிந்து விழும் ஆபத்தான நிலையில் பொது சுகாதாரத்துறைக்கு சொந்தமான குடியிருப்புகள்..

இடிந்து விழும் ஆபத்தான நிலையில் பொது சுகாதாரத்துறைக்கு சொந்தமான குடியிருப்புகள்..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2019, 1:25 am

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் பொது சுகாதாரத்துறைக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இரவில் இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த ஆபத்தான குடியிருப்பு வீடுகளை அகற்றி புதிய குடியிருப்பு வீடுகளை கட்டுவதற்கு உடனே நடவடிக்கை எடுக்குமாறு பொதுநலன்கருதி மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் M.ஞானசேவியரால் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆபத்தான நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி புதிய குடியிருப்பு வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!