திமுக., தென் மண்டல மாநாடு விருதுநகரில் மார்ச் 6 இல் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை விருதுநகர் – அருப்புக்கோட்டையில் உள்ள சரஸ்வதி திருமண மகாலில் 20/02/2019 காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. விருதுநகர் மாவட்ட செயலர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் (தெற்கு ) , தங்கம் தென்னரசு (வடக்கு) ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
மார்ச் 6ல் விருதுநகரில் திமுக., தென் மண்டல மாநாடு- அறிவிப்பு வெளியீடு..
எழுதியவர்: ஆசிரியர் February 18, 2019, 10:50 pm





You must be logged in to post a comment.