17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ஆட்சியர் ஆணை..

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ஆட்சியர் ஆணை..

எழுதியவர்: ஆசிரியர் February 18, 2019, 7:13 pm

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களிடம் இருந்து 477 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அந்த மனுக்கள் தொடர்பாக துரித விசாரணை நடத்தி தகுதியானோருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு வருவாய்த்துறை மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1000 பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.

தனித்துணை ஆட்சியர் திருஞானம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!