18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமுதாய சேவை செய்வதற்கு மாணவர்கள் ஊக்குவிப்பு கருத்தரங்கு..

சமுதாய சேவை செய்வதற்கு மாணவர்கள் ஊக்குவிப்பு கருத்தரங்கு..

எழுதியவர்: ஆசிரியர் February 18, 2019, 6:51 pm

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் அழகன்குளம் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி நிறுவனர் ஹாஜி ஹபிபுல்லா கான் தலைமை வகித்தார். தாளாளர் ஹெச்.பவுசுல் ஹனியா, பள்ளி துணை தலைவர் முகமது ஷர பத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி இயக்குநர் எம்.முகமது இப்ராம்ஷா வரவேற்றார்.

ரெட் கிராஸ் சொசைட்டியின் சேவைகள் குறித்து  ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ராக் லாண்ட் மதுரம், பொருளாளர் சி. குணசேகரன், ரெட் கிராஸ் புரவலர் என். ராமநாதன் ஆகியோர் பேசினர். அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் ஜே. முத்துக்குமரன், ரெட் கிராஸ் புரவலர் தேவி எம். உலக ராஜ், முதுகுளத்தூர் தாலுகா ரெட்கிராஸ் அமைப்பாளர் துரை பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு நல்ல மாணவர் யார் ? சேவை செய்வதால் ஏற்படும் பயன்கள் ? மன மகிழ்வுகள், பிற்கால சந்ததியினருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவரித்தனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்க்கப்பட்டன. பள்ளியில் கடந்த மாதம் நடைபெற்ற உணவு திருவிழாவின் போது மாணவர்கள் சேகரித்த ரூ. 55 ஆயிரத்தை இறந்தவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் ஃப்ரீசர் பெட்டி வாங்குவதற்கு ரெட் கிராஸ் சொசைட்டியிடம் வழங்கினர்.  ஆசிரியை நளினா தேவி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!