18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு இராமநாதபுரம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அஞ்சலி..

உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு இராமநாதபுரம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அஞ்சலி..

எழுதியவர்: ஆசிரியர் February 18, 2019, 4:51 pm

காஷ்மீர் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் பிப்., 14 இல் உயிரிழந்த சிஆர்பிஎப்., (மத்திய ஆயத்த பாதுகாப்பு படை) வீரர்கள் 44 பேரின் ஆன்மா சாந்தியடைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் லூயிஸ் லெவல் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமைதி பேரணி சென்றனர். முன்னதாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். பள்ளி தாளாளர் சகாய மேரி, முதல்வர் அருள் மேரி தலைமையில் ஆசிரியர்கள் செய்தனர்.

அதே போல்  இராமநாதபுரம் அரசு கல்லூரி  என்சிசி சார்பில் காஷ்மீர் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் 14/02/2019 இல் சிஆர்பிஎப்., (மத்திய ஆயத்த பாதுகாப்பு படை) வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டிய ராமநாதபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்சிசி சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிழந்த வீரர்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். கல்லூரி முதல்வர் மருதம்மாள்,  என்சிசி அதிகாரி லெப்டினன்ட் உத்திர செல்வம் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!