18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தல் தொடர்பான நிகழ்வுகளுக்கு வீடியோ கருவிகள் மற்றும் தகுதி வாய்ந்த வீடியோகிராபர்களை கொண்ட ஏஜென்ஸிகள் மற்றும் நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் சம்பந்தமான அறிவிப்பு..

தேர்தல் தொடர்பான நிகழ்வுகளுக்கு வீடியோ கருவிகள் மற்றும் தகுதி வாய்ந்த வீடியோகிராபர்களை கொண்ட ஏஜென்ஸிகள் மற்றும் நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் சம்பந்தமான அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 17, 2019, 12:41 am

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 2019 பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டிää இராமநாதபுரம் மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்புக்குழு, பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு போன்ற குழுக்கள் மேற்கொள்ளும் பணியினையும், தேர்தல் வேட்பாளர் செலவின பணிகளை கண்காணிக்கவும் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை படம் பிடித்திடவும் தேவையான வீடியோ கருவிகள் மற்றும் தகுதி வாய்ந்த வீடியோகிராபர்களை கொண்ட ஏஜென்ஸிகள் மற்றும் நிறுவனங்களை ஒப்பந்தப்புள்ளிகள் (Tender) மூலம் மற்றும் உரிய நிபந்தனைகளின் அடிப்படையில் நியமனம் செய்திட தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

இந்த ஒப்புந்தப்புள்ளிகள் தொடர்பான விவரங்கள் www.tenders.tn.gov.in மற்றும் https://ramanathapuram.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அதனைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து எதிர்வரும் 26.02.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களின் அறையில் உள்ள சீலிடப்பட்ட மூடிய பெட்டியில் ஒப்படைக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பான நெறிமுறைகள் குறித்த முன் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 19.02.2019 மாலை 4.00 மணி அளவில்; நடைபெற உள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளிக்கு தகுதியான நபர்கள்ஃநிறுவனங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!