17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் அருகே 8 – மாத இளம் கர்ப்பிணி பெண் மர்ம மரணம்..

திண்டுக்கல் அருகே 8 – மாத இளம் கர்ப்பிணி பெண் மர்ம மரணம்..

எழுதியவர்: ஆசிரியர் February 16, 2019, 11:50 pm

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள K.இராமநாதபுரத்தில் வசித்து வரும் தீபக் பாண்டியன் மஹா லெட்சுமி – (22 )இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

தற்போது மஹாலட்சுமி 8 – மாத கற்பிணியாக உள்ளார் இந்நிலையில் இன்று மதியம் தனது வீட்டில் மஹாலெட்சமி வீட்டில் தூக்கு கயிற்றால் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறி கணவர் தீபக் பாண்டி தானே ஆம்புலன்ஸை அழைத்து அவரே திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகே மற்றவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனால் தகவல் அறிந்து வந்த மஹா லெட்சுமியின் பெற்றோர் மகளின் சாவில் மர்மம் உள்ளதாக கூறிசெம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் மஹாலெட்சுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் செம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்த கர்பிணி மஹாலெட்சுமியின் உடல் உடல் கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளது…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!