18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி..

இராமநாதபுரத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் February 16, 2019, 1:44 pm

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்த ஷாஜகான் மகன் ஆசிப்கான், 26. இவர், இன்று அதிகாலை என்மனங்கொண்டான்  சந்தனக்கூடு விழா சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். என்மனங்கொண்டான் முனியய்யா கோயில் அருகே வந்த போது  எதிரே இரு சக்கர வாகனத்தில்  வந்த மண்டபம் சேது நகர் முகமது சதக்கத்துல்லா மகன் பைத்துல் முகைதீன், 22 வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆசிப்கான் தலை படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கால் முறிவு ஏற்பட்ட முகைதீன் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமான ஆசிப்கான் தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது.  இது குறித்து உச்சிபுளி போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!