மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில், அ.இ.அ.தி.மு.க மாநில அம்மா பேரவை சார்பில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களின் தலைமையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை” அமைச்சர் “கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, நீதிபதி,எஸ்.எஸ்.சரவணன், பெரியபுள்ளான் (எ) செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், முத்துராமலிங்கம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல், நத்தம் கண்ணன், முன்னாள் ஒத்தக்கடை சேர்மன் இளங்கோவன், செல்வகுமார் சீனிவேல், மணிகண்டன், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் பன்னீர்செல்வம், முனியாண்டி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையில் அ.இ.அ.தி.மு.க மாநில அம்மா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
எழுதியவர்: ஆசிரியர் February 15, 2019, 7:09 pm




You must be logged in to post a comment.