18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » சங்க கால இலக்கிய புரட்சிப் பெண்களை நினைவூட்டும் விதமாக மாறுவேடத்தில் மாணவிகள் – தாசிம் பீவி மகளிர் கல்லூரி தமிழ் துறை சார்பாக புதிய முயற்சி

சங்க கால இலக்கிய புரட்சிப் பெண்களை நினைவூட்டும் விதமாக மாறுவேடத்தில் மாணவிகள் – தாசிம் பீவி மகளிர் கல்லூரி தமிழ் துறை சார்பாக புதிய முயற்சி

எழுதியவர்: keelai March 10, 2017, 5:10 pm

பன்னெடுங்கால சரித்திர பெருமை வாய்ந்த நம் தமிழ் மண்ணின் சங்க கால இலக்கிய புரட்சிப் பெண்களையும், நம் தாய் திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீர திருமகள்களையும் நினைவூட்டும் விதமாக தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று (10-03-2017) நடந்த   மாறுவேடத்தில் அச்சு அசலாக காட்சியளித்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.

இவர்களுள் அவ்வையார், காரைக்கால் அம்மையார், கண்ணகி, மணிமேகலை, தில்லையாடி வள்ளியம்மை, வீர மங்கை வேலுநாச்சியார் போன்று மாணவிகள் மாறுவேடம் அணிந்திருந்தனர். இவர்களை கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூத்,  சிறப்பு விருந்தினர் இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரியின் தமிழ் துறை துணை தலைவர் அப்துல் ரஹீம் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!