17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் தாலுகா அலுவலகம் முன்புஉதவித் தொகை வேண்டி அனைத்து வகை மாற்றுதிறனாளிகள்காத்திருப்பு போராட்டம்..

ஆத்தூர் தாலுகா அலுவலகம் முன்புஉதவித் தொகை வேண்டி அனைத்து வகை மாற்றுதிறனாளிகள்காத்திருப்பு போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 15, 2019, 4:22 pm

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில்ஓராண்டிற்கு மேலாக உதவித்தொகை வேண்டி காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தின் முன்னால் நடைபெற்ற முற்றுகை போராட்டம். சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்களும் வனிதா அவர்களும் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் சிறப்புரையாற்றினார் இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கண்டன முழக்கம் இட்டனர்.

போராட்டத்திற்கு பின்னர் ஆத்தூர் தாசில்தார் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆத்தூர் தாசில்தார் உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

செய்தியாளர்கள் திண்டுக்கல் மாவட்டம் -PS.ஃபக்ருதீன் மற்றும் ஒளிப்பதிவாளர் P.அழகர்சாமி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!