18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாசார சீர்கேடு விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாசார சீர்கேடு விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

எழுதியவர்: ஆசிரியர் February 14, 2019, 8:27 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 14.02.19 மாலை 03.00மணி அளவில் கலாசார சீர்கேடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி S.பாத்திமா மரியம் இறைவணக்கத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால்  வரவேற்புரை ஆற்றினார். பின்னர் சிறப்பு விருந்தினர் அவர்கள் அல் ஹாஃபிஸ் அல்ஹாஜ் M.S.ஷேக்மதார் M.A,M.Phil., ஆலிம், நாஃபிஈ, கிரௌன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் கோரிப்பாளையம் பள்ளிவாசல் இமாம், மதுரை,  “பெண்கள் அந்நிய ஆடவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்” என்பதை பற்றியும் “இன்றைய காலத்தில் கலாசாரம் எவ்வாறு சீர்கேடு அடைகின்றது” என்பதை பற்றியும் சிறப்பாக மாணவிகள் மத்தியில். உரை ஆற்றினார்.

இறுதியாக அரபித் துறைத் தலைவர் மற்றும் மாணவர் மன்ற ஒருங்கினணப்பாளர் M.ரெய்ஹானத்தில் அதவியா நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!