17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூலிகை செடிகள் கொண்ட பூங்காவாக மாறிய தரமணி காவல் நிலையம்…

மூலிகை செடிகள் கொண்ட பூங்காவாக மாறிய தரமணி காவல் நிலையம்…

எழுதியவர்: ஆசிரியர் February 13, 2019, 11:58 pm

காவல் ஆய்வாளர் ஒருவரின் முயற்சியால் பூங்காவாக மாறிய தரமணி காவல் நிலையம், அங்கு வரும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களின் மன உளைச்சலையும் குறைக்க உதவி வருவதாக கூறப்படுகிறது.

சென்னை தரமணி காவல் நிலையத்தில்,  ஆய்வாளர் பாஸ்கர் மேற்கொண்ட முயற்சி தான் இந்த மாற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. காவல் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூங்காவில்,  மூலிகை, காய்கறி, மரவகைகள் மற்றும் அழகு செடிகளும் இடம்பெற்றுள்ளன.

புகார் கொடுக்க வருபவர்களும் இந்த பூங்காவை சுற்றிப் பார்த்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் முன்னுதாரணமாக சென்னை தரமணி காவல் நிலையம் உள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!