தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி பேருராட்சி அலுவலகம் அருகில் தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடன்குடி பேருந்து நிலைய பொதுக்கழிப்பிடத்தை முறையாக சுத்தம் செய்யாமல் தொற்று நோயை பரப்புவதாக கூறி அதனை இடம் மாற்றம் செய்ய கோரியும், சில வருடங்களுக்கு முன் அறிவிப்பின்றி நிறுத்திய உடன்குடி சுற்றுவட்டார பகுதிக்கு மினி பஸ் போக்குவரத்தை உடனே இயக்க கோரியும், உடன்குடி முதல் மெஞ்ஞானபுரம் சாலை 8 ஆண்டுகள் கிடப்பில் போட பட்டடுள்ளதை கண்டித்தும் சாலைய உடனே அமைக்கும் படியும், நயினார்பத்து கிராமம் JJ நகர் பகுதி மக்களின் 8 வருட கோரிக்கையான வீட்டு மனை பட்டா வழங்க கோரியும் அடிப்படை வசதிகளை சீரமைத்து தரும்படியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் மகராஜன் தலைமை வகித்தார் மாநில நிர்வாக குழு உறுப்பினர் காதர் முகைதின் வரவேற்று பேசினார் தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கண்டனஉரை மாநில பொதுச் செயலாளர் க.முகைதீன் மற்றும் தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் மாநில இனைச் செயலாளர் மனோகரன் கண்டன உரை ஆற்றினார். மற்றும் தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தினர் மாநில நிர்வாக S.ஜெயசெல்வக்குமார் மாநிலநிர்வாக குழுஉறுப்பினர் S.நோவா கணேசன் பொதுக்குழு உறுப்பினர் S.காசிலிங்கம் நகரதொழிலாளார் K.ராமசெல்வம் திருச்செந்தூர் நகர செயலாளார் V.வெள்ளைராஜா Kv.மகாராஜன் நகர செய்திதொடர்பாளார் கிளை செயலாளார் மற்றும் ஜே.ஜே.நகர் பகுதி பெண்கள் கலந்துக்கொண்டார்கள்




You must be logged in to post a comment.