18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட கோரி வரும் 20ம் தேதி மதுரையில் பந்த். தேவர் தேச பக்தி முன்னணி நிர்வாகிகள் அறிவிப்பு..

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட கோரி வரும் 20ம் தேதி மதுரையில் பந்த். தேவர் தேச பக்தி முன்னணி நிர்வாகிகள் அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 13, 2019, 9:51 pm

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட கோரி வரும் 20ம் தேதி மதுரையில் பந்த். தேவர் தேச பக்தி முன்னணி நிர்வாகிகள் அறிவிப்பு.

மதுரை காளவாசலில் உள்ள “அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி” அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் கதிரவன், கூறியதாவது.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட கோரியும், ஏழாம் வகுப்பு பாடத்தில் முத்துராமலிங்கத்தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க கோரியும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தவர்களுக்கு “டி.என்.டி சான்றிதழ்” வழங்கக் கோரியும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழக அரசை கண்டித்து, மதுரையில் வரும் 20.ம் தேதி “பந்த்” நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் பந்த் நடைபெறும்  அன்று கடைகள் அனைத்தும் அடைத்து இருக்கும். பேருந்து,ஆட்டோ இயங்காது.”பந்த்” க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தேவர் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறினார்.

இதில் “தேவர் தேச பக்தி முண்ணனி” சார்பில், அதன் நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் “அகில இந்திய பார்வர்ட் பிளாக்” தலைவருமான “கதிரவன், பாரதிய பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் “முருகன் ஜி”, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் “திருமாறன், நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் “மகாராஜன் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!