17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கும் அரிய கடல் ஆமைகள்..

இராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கும் அரிய கடல் ஆமைகள்..

எழுதியவர்: ஆசிரியர் February 13, 2019, 9:17 pm

இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் அரியவகை கடல் ஆமை இறந்த நிலையில் இன்று (13/02/2019) காலை கரை ஒதுங்கியது. இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறையிடம் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது கடல் சீற்றத்தால் மீண்டும் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதால் வனத்து துறையினர் கடலோரப்பகுதியில் தேடி வருகின்றனர். அப்பகுதி மீனவர்கள் கூறும்போது, இப்பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமையை கண்டுபிடித்து உடனடியாக மண்ணில் புதைக்க வேண்டும், இல்லையெனில் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கரை ஒதுங்கிய ஆமை சித்த ஆமை வகையை சேர்ந்தது. இது இந்தியாவில் ஏழு இடங்களில் ஒன்றான மன்னார்வளைகுடா கடல் பகுதியில் கானப்படும், இது படகு அல்லது பாறையில் மோதி தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் மேலும் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக உள்ளதால் கரை ஒதுங்கிய ஆமை மீண்டும் கடலில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது. கடல் வாழ் உயிரின காப்பாளர்கள் தேடி வருகின்றனர்” என்றார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!