18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரூ.2.30 லட்சம் மோசடி இளம்பெண் மீது வழக்கு…

ரூ.2.30 லட்சம் மோசடி இளம்பெண் மீது வழக்கு…

எழுதியவர்: ஆசிரியர் February 13, 2019, 7:15 pm

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சூரன்காட்டு வலசையைச் சேர்ந்த சேது சம்பத் மகள் பிரீத்தி. இவர் மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்த பழனிவாசகம் என்பவரிடம் தனது சொந்த தேவைகளுக்காக கடந்த 2016 ஜன.20 ஆம் தேதி ரூ.2.30 லட்சம் கடன் வாங்கினார். 4 மாதத்திற்குள் பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாகவும் உறுதியளித்தார். ஓராண்டுக்கு மேலாகியும் பணத்தை பிரீத்தி திரும்ப செலுத்தவில்லை. மீண்டும் 3 மாதம் அவகாசம் கேட்டு கடந்த 28.07.2017 அன்று பிரீத்தி பத்திரம் எழுதி கொடுத்தார். 3 மாதம் கழித்தும் செலுத்தாததால் நேரிலும், செல்போனில் தொடர்பு கொண்டு பல முறை கேட்டு, தான் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை என கூறி நாட்களை கடத்தி வந்தார்.

இது குறித்து மண்டபம் போலீசில் பழனிவாசகம் புகார் அளித்தார். இதன்படி ரூ.1.15 லட்சம் வீதம், 30.11.18 ல் ஒரு தவணை, 30.5.19ல் மற்றொரு தவணையாக ரூ.2.30 லட்சத்தை செலுத்தி விடுவதாக 24.8.18 ல் உறுதிமொழி எழுதி கொடுத்தார். முதல் தவணை காலம் முடிந்த பிறகும் எவ்வித தொகையும் பிரீத்தி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதையடுத்து 17.12.18ல் நேரில் சென்று கேட்ட பழனிவாசகத்திற்கு பிரீத்தி மிரட்டல் விடுத்தாக மண்டபம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பிரீத்தி மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் பழனிவாசகம் சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தார். எஸ்.பி., அறிவுத்தியும் பிரீத்தி மீது மண்டபம் போலீசில் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக ராமேஸ்வரம் ஜே.எம்., கோர்ட்டில் பழனிவாசகம் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி பிரீத்தி மீது மண்டபம் போலீசார் 420 பிரிவு படி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!