17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றக்கோரி கோவில்பட்டியில் பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் முகவர்கள், சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் ..

உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றக்கோரி கோவில்பட்டியில் பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் முகவர்கள், சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் ..

எழுதியவர்: ஆசிரியர் February 13, 2019, 11:58 am

இந்தியாவில் 30 ஆண்டுகளாக செயல்பட்ட பிஏசிஎல் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக இயங்காததால், இதன் 300 கிளைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 கோடி பாலிசிதாரர்கள் கட்டிய ரூ.55 ஆயிரம் கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2.2.2016-ல் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 மாதத்துக்குள் நீதிபதி லோதா கமிட்டி மூலம் பிஏசிஎல் சொத்துகளை விற்று பணமாக்கி பாலிசிதாரர்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், 36 மாத காலம் கடந்த பின்பும் பணம் வழங்கப்படாததை கண்டித்தும், பாலிசிதாரர்களுக்கு உடனடியாக பணம் வழங்க கோரியும் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் முகவர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் எஸ்.மோகன்ராஜ் தலைமை வகித்தார். கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை தலைவர் என்.முத்துராஜ் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். பிஏசிஎல் களப்பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் என்.ஜோதி. மார்க்சிஸ்ட் நகர செயலாளர் ஆர்.முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணவேணி, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.விஜயலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தர்ணா போராட்டத்தில் முதலீட்டாளர்கள், முகவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!