திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ,கல்வி நிறுவனங்களின் அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது பள்ளியின் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு பெண்ணை அழைத்து விசாரித்தபோது ,அவர் பட்டிவீரன்பட்டி தேவரப்பன் பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வரவே அவரை கைதுசெய்து ஆயிரத்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து ,நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
பட்டிவீரன்பட்டி காவல்நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது..
எழுதியவர்: ஆசிரியர் February 12, 2019, 9:12 pm




You must be logged in to post a comment.