18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேம்பால சாலையை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…

மேம்பால சாலையை சீரமைத்த நாம் தமிழர் கட்சியினர்…

எழுதியவர்: ஆசிரியர் February 12, 2019, 4:54 pm

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே உள்ள இரயில்வே மேம்பாலத்தில் குண்டும்,குழியும் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டியபடி இருந்ததால் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் உயிர்பலி ஏற்படும் முன் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து பல பத்திரிக்கைகளில் சாலையை சீரமைக்க கோரி செய்தி வெளியாகியும் கூட சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையோ, மாநகராட்சி நிர்வாகமோ செவிசாய்க்கவும்வில்லை, விபத்தை  தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மக்கள் மீதும், சமுதாயம் மீதும் அக்கறை கொண்ணு மேம்பால சாலை வழியாக பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாக்கும் வண்ணம் நாம் தமிழர் கட்சியினர் சிமென்ட், சல்லி, மணல் கொண்டு மேம்பால சாலையின் நடுவே ஏற்டபட்ட பள்ளத்த்தில் கான்கிரீட் போட்டு சாலையை சீரமைத்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!