18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பாரப்பட்டி ஏரிக்கரையிலிருந்து மலையூர் வரை புதிய தார்சாலை அமைப்பதற்காக அகற்றப்பட்ட ரோடு சரி செய்ய மக்கள் கோரிக்கை..

பாப்பாரப்பட்டி ஏரிக்கரையிலிருந்து மலையூர் வரை புதிய தார்சாலை அமைப்பதற்காக அகற்றப்பட்ட ரோடு சரி செய்ய மக்கள் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் February 12, 2019, 12:39 pm

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி இருந்து மலையூர் அடிவாரம் வரை ஆறு கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இப்பாதை வழியாக செல்லும் கிராமங்கள் வள்ளுர், அம்பேத்கர் காலனி, பாரதிபுரம். சொரக்கா பட்டி கொட்டாய், சொரக்கா பட்டி, மலையூர் ஆகிய கிராமங்கள் உள்ளது.

இவ்வழியாக கிராம மக்கள் தினந்தோறும் அத்தியாவசிய தேவைக்காக பாப்பாரப்பட்டிக்கு வந்து செல்லக்கூடிய கட்டாயம் உள்ளது சில மாதங்களுக்கு முன்பு பாப்பாரப்பட்டி ஏரிக்கரையிலிருந்து மலையூர் வரை புதிய தார்சாலை அமைப்பதாக கூறி இருந்த தார்சாலை அகற்றினர். உடனடியாக புதிய தார்சாலை அமைப்பது போல் ஜெல்லி கற்கள் கொட்டி வந்தனர் வழியே போகும் கிராம மக்கள் புதிய தார்சாலை போடுவார்கள் என்று நம்பி இருந்தார்கள் ஜல்லி கற்களை கொட்டி பல மாதங்களாகியும் இன்னும்.  தார்சாலை அமைக்கும் பணியில் தொடங்கவில்லை கிராம மக்கள் தினந்தோறும் பாதையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மண் தூசி பறந்து பின்னால் வாகனத்தில் வரக்கூடியவர்களுக்கு வண்டி ஓட்டுவது சிரமமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

மலையூர் அடிவரம் மேலே அமைந்துள்ள புகழ்பெற்ற கோபால்சாமி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல வெளி கிராமங்களிலிருந்தும் இந்தப் பாதை வழியாகத்தான் மக்கள் கோயிலுக்கு செல்லும் வசதி உள்ளது இவ்வழியே போகும் கிராம மக்கள் உடனடியாக மாவட்ட அதிகாரிகள் கவனத்திற்கொண்டு இந்தப் பாதையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!