17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேடபட்டி அருகே இரவுப் பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ.க்கு கத்தி குத்து..

சேடபட்டி அருகே இரவுப் பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ.க்கு கத்தி குத்து..

எழுதியவர்: ஆசிரியர் February 12, 2019, 11:29 am

பேரையூர் தாலுகா, சேடபட்டி காவல் நிலைத்திற்கு உட்பட்டது சின்னக் கட்டளை. இந்தக் கிராமப் பகுதியில் நேற்று இரவுப் பணியில் சேட பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. மாயன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும் படியான இடங்களில் பார்வையிட்டுள்ளார். அப்போது போர்வையால் முகத்தை மூடி உட்கார்ந்து இருந்தவரை யார்? என பார்க்க எஸ்.ஐ. மாயன் முயற்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது திடீரென அந்த மர்ம நபர் எஸ்.ஐ. மாயனை கழுத்தருகே கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அதில் பலத்த காயமடைந்தவர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். போலீசையே கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!