17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலைவழக்கில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை..

கொலைவழக்கில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை..

எழுதியவர்: ஆசிரியர் February 12, 2019, 9:40 am

கடந்த 2015-ம் வருடம் மதுரை மாநகர் நேதாஜி மெயின் ரோடு, பி.பி.குளத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மாரிச்சாமி என்பவரை அவரது மனைவி கொலை செய்துவிட்டதாக கிராம நிர்வாக அலுவலர் திரு. முத்துமணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் D1 தல்லாகுளம் காவல் நிலையத்தில் கொலைவழக்கு பதிவுசெய்யப்பட்டு பலன்விசாரணை செய்ததில் ஆறுமுகத்தை கொலைசெய்தது அவரது மனைவி மனைவி சுப்புலட்சுமிதான் என தெரிய வந்தது.  எனவே அவரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்ததில் அவரது கணவர் குடிபோதையில் தினமும் தகராறு செய்து வந்ததால் ஆத்திரத்தில் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இவ்வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இவ்வழக்கு நேற்று  11.02.2019 நீதித்துறை நடுவர் மாண்புமிகு திருமதி. நஜீமா பேகம்,  சுப்புலட்சுமியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள்தண்டனை மற்றும் ரூ.1000-ம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் புலன் விசாரணையை திறம்பட செய்து முடித்த காவல் ஆய்வாளர் (தற்போது D3 கூடல்நகர் காவல் நிலையம்) திரு.சந்திரசேகர் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., பாராட்டினார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!